/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விஜயவாடா டூ இலங்கைக்கு கஞ்சா கடத்தல் *124 கிலோ பறிமுதல்; 5 பேர் கைது விஜயவாடா டூ இலங்கைக்கு கஞ்சா கடத்தல் *124 கிலோ பறிமுதல்; 5 பேர் கைது
விஜயவாடா டூ இலங்கைக்கு கஞ்சா கடத்தல் *124 கிலோ பறிமுதல்; 5 பேர் கைது
விஜயவாடா டூ இலங்கைக்கு கஞ்சா கடத்தல் *124 கிலோ பறிமுதல்; 5 பேர் கைது
விஜயவாடா டூ இலங்கைக்கு கஞ்சா கடத்தல் *124 கிலோ பறிமுதல்; 5 பேர் கைது
ADDED : ஜூலை 09, 2024 09:19 PM

காரைக்குடி:ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து காரைக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சாவை குன்றக்குடி போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி போலீஸ் எஸ்.ஐ., பிரேம்குமார் பாதரக்குடி அருகே உள்ள திட்டு மலைக்காளி கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு கார் நின்று கொண்டிருந்தது. காரில் இருந்தவர்களை விசாரித்த போது அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதாக கூறினர். அப்போது அருகே இருந்த பாலத்தின் கீழே இருந்து வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் பைக்கை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர். போலீசார் விரட்டியதும் பைக்கை எடுத்து செல்ல முடியாததால் அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் தப்பி ஓடினர். போலீசார் திரும்பி வந்து பார்த்தபோது காரும் வேகமாக கிளம்பியது.
போலீசார் பாலத்தின் கீழே பார்த்தபோது, கடல் வழியாக கடத்த ஏதுவாக தண்ணீரில் நனையாத 62 பண்டல்களில் 124 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் புதுக்கோட்டை, திருச்சி போலீசாருக்கு தப்பிய கார் குறித்து தகவல் அளித்தனர். காரை சமயபுரம் அருகே செக் போஸ்டில் போலீசார் பிடித்தனர். அதில் 5 பேர் இருந்தனர்.
இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், இளவரசு, எஸ்.ஐ., பிரேம்குமார் அந்த 5 பேரையும் குன்றக்குடிக்கு அழைத்து வந்தனர். ஏ.டி.எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., பிரகாஷ் விசாரணை நடத்தினர்.
கடத்தலில் ஈடுபட்டது விஜயவாடாவை சேர்ந்த வித்யாசாகர் 22, அகிலேஷ் வர்மா 22, செல்லா 23, சண்டி 24, சுகாஷ் 26 என்பதும், சென்னையைச் சேர்ந்த, கஞ்சா கடத்தல்காரர் கூறும் இடத்தில் கஞ்சாவை ஒப்படைத்தால் நபர் ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கார், பைக், 5 அலைபேசி, 124 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், பாலத்தில் இருந்து தப்பியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.