Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்டவராயன்பட்டி கோயிலில் கும்பாபிஷேக விழா

கண்டவராயன்பட்டி கோயிலில் கும்பாபிஷேக விழா

கண்டவராயன்பட்டி கோயிலில் கும்பாபிஷேக விழா

கண்டவராயன்பட்டி கோயிலில் கும்பாபிஷேக விழா

ADDED : மார் 12, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன் பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

யாகசாலை பூஜை மார்ச் 8ல் துவங்கின. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், கொன்னையூர் சிவசங்கரலிங்கம் உள்ளிட்ட சிவாச்சாரியார்களால் பூஜைகள் நடந்தன.

நேற்று காலை 9:40 மணிக்கு நான்காம் காலயாகசாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி கோபுர, விமானங்களுக்கு சென்றது.

காலை 10:03 மணிக்கு புனிதநீரால் கலசங்களுக்கு அபிேஷகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடந்தன. கண்டவராயன்பட்டி நகரத்தார், நாட்டார், பையூர் நாட்டார் சீர் கொண்டு வந்தனர்.

இரவில் மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை திருவீதி உலா நடந்தது. முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம், அமைச்சர் பெரிய கருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.

வாழ்த்தரங்கம், நடனம், கவிதை அரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஏற்பாட்டினை தலைவர் சிவ சுப்பிரமணியன், செயலர் குமரப்பன், பொருளாளர் நாச்சியப்பன், இணைச் செயலாளர்கள் தேனப்பன், சொக்கலிங்கம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us