ADDED : மார் 12, 2025 12:48 AM
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கிராமங்களை புறக்கணித்து ரூட் மாறும் தனியார் பஸ்களால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து பொன்னமராவதிக்கு சிங்கம்புணரி வழியாக தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அட்டப்பட்டி, சுக்காம்பட்டி, பாண்டாங்குடி என மூன்று வழித்தடங்களில் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
ஆனால் தனியார் பேருந்துகள் அட்டப்பட்டி, சுக்காம்பட்டி வழித்தடங்களில் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக பாண்டாக்குடி வழியாக மட்டும் சிங்கம்புணரி வருகின்றன. இதனால் மற்ற தடத்தில் உள்ள கொடுக்கம்பட்டி, அட்டப்பட்டி, கொன்னபட்டி, நாட்டார்மங்கலம், சுக்காம்பட்டி, வஞ்சிப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பஸ் போக்குவரத்து இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
கிராமங்கள் வழியே வரும்போது கூடுதல் நேரம் பிடிப்பதால் தேசிய நெடுஞ்சாலை வழியாக இப்பேருந்துகள் வந்து விடுகின்றன.
அனைத்து தனியார் பேருந்துகளும் பெர்மிட் அடிப்படையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அந்த ரூட்களில் அரசு பேருந்துகளை இயக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.