மனித நேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
மனித நேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
மனித நேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 07, 2024 11:37 PM
இளையான்குடி : இளையான்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இங்கு, சிவகங்கை ரோட்டில் ரூ.3.75 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். பழைய பஸ் ஸ்டாண்டிற்கும், புதிய பஸ் ஸ்டாண்டிற்கும் இடையே 4 கி.மீ., துாரம் உள்ளது.
இதனால், இங்கு டவுன், மினி பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தியும், புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர், சேர்கள், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, கருப்பு கொடி போராட்டம் நடத்தினர்.