/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்... ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்...
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்...
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்...
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்...
ADDED : ஜூலை 22, 2024 05:10 AM

தேவகோட்டை: ஹிந்து கோயில்களின் நிர்வாகத்தில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வழியுறுத்தி, தேவகோட்டையில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் செய்த, ஹிந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டபொது செயலாளர் அக்னிபாலா, மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், காரைக்குடி நகர் தலைவர் கார்த்தி, தேவகோட்டைநகர் செயலாளர்கள் தர்மராஜ், செல்லபாண்டி, பொருளாளர் அழகுபாண்டி உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஹிந்து கோயில்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்திய 25 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் 4 ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தங்கபாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் முருகசெல்வம் முன்னிலை வகித்தார். சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் இருந்தும் அறநிலையத்துறை வெளியேறு, கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோயிலை கைப்பற்றும் நடவடிக்கையை கைவிடு, காளாப்பூர் கொக்கன் கருப்பர் கோயில் இடத்தில் அரசு கட்டடம் கட்டும் முயற்சியை கைவிடவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். எஸ்.புதூர் ஒன்றிய பொது செயலாளர் பழனிகுமார், பா.ஜ., ஒன்றிய தலைவர் இளையராஜா, விஷ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் மனோஜ், குமார், சேது பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர்களை போலீசார் கைது செய்தனர்.