ADDED : ஜூலை 22, 2024 05:09 AM

காரைக்குடி: காரைக்குடி செக்மேட் சதுரங்க கழகம் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவில் 6 வது ஆண்டு செஸ் போட்டிகள் அழகப்பா மெட்ரிக் பள்ளியில் நடந்தது. 7 வயது முதல் 25 வரையும் 5 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.
மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். அழகப்பசெட்டியார் கல்வி அறக்கட்டளை மேலாளர் காசி விஸ்வநாதன், அழகப்பா மெட்ரிக் பள்ளி முதல்வர் நேரு, காரைக்குடி ஸ்டார் அரிமா சங்கத் தலைவர் ஆனந்தி, மாவட்ட சதுரங்க கழகச் செயலாளர் கண்ணன், பொருளாளர் பிரகாஷ், கூடுதல் செயலாளர் பிரகாஷ் மணிமாறன் துவக்கி வைத்தனர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.