/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குரூப் 1 தேர்வு: சிவகங்கையில் 2703 பேர் பங்கேற்பு குரூப் 1 தேர்வு: சிவகங்கையில் 2703 பேர் பங்கேற்பு
குரூப் 1 தேர்வு: சிவகங்கையில் 2703 பேர் பங்கேற்பு
குரூப் 1 தேர்வு: சிவகங்கையில் 2703 பேர் பங்கேற்பு
குரூப் 1 தேர்வு: சிவகங்கையில் 2703 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 04, 2024 01:21 AM
சிவகங்கை: காரைக்குடியில் 10 தேர்வு மையங்களில் ஜூலை 13 அன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வினை 2,703 பேர் எழுத உள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் துணை கலெக்டர், டி.எஸ்.பி., உதவி கமிஷனர், கூட்டுறவு துணை பதிவாளர், உதவி இயக்குனர் (ஊரக வளர்ச்சி துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வை அறிவித்துள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான முதன்மை கொள்குறிவகை தேர்வு ஜூலை 13 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வில் பட்டதாரிகள் 300 வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும்.
இத்தேர்விற்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 2703 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு ஜூலை 13 அன்று காரைக்குடி அழகப்பா கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் 20 தேர்வர்களுக்கு ஒரு தேர்வு அறை கண்காணிப்பாளர், பறக்கும் படையினர் என நிர்ணயிக்கப்பட உள்ளனர்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் தேர்வுக்கான கண்காணிப்பு பணிகள் நடைபெறும். இத்தேர்விற்கு செல்வோருக்கு வசதியாக புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்படுகின்றன.