/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கொங்கம்பட்டியில் குறைந்தழுத்த மின்சப்ளையால் பொருட்கள் சேதம் கொங்கம்பட்டியில் குறைந்தழுத்த மின்சப்ளையால் பொருட்கள் சேதம்
கொங்கம்பட்டியில் குறைந்தழுத்த மின்சப்ளையால் பொருட்கள் சேதம்
கொங்கம்பட்டியில் குறைந்தழுத்த மின்சப்ளையால் பொருட்கள் சேதம்
கொங்கம்பட்டியில் குறைந்தழுத்த மின்சப்ளையால் பொருட்கள் சேதம்
ADDED : ஜூலை 11, 2024 05:06 AM
இளையான்குடி: இளையான்குடி அருகே கொங்கம்பட்டி கிராமத்தில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
கொங்கம்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் இந்த வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரம் குறைந்தழுத்த மின்சாரமாக இருப்பதால் வீடுகளில் உள்ள பிரிட்ஜ்,வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இரவு நேரங்களில் திருட்டு பயமும்,விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் சிரமத்திற்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.