/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு கணினி பொருட்கள் சேதம் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு கணினி பொருட்கள் சேதம்
அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு கணினி பொருட்கள் சேதம்
அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு கணினி பொருட்கள் சேதம்
அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு கணினி பொருட்கள் சேதம்
ADDED : ஜூலை 21, 2024 04:56 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்றுமுன்தினம் முழுவதும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருப்புவனம் நெல்முடிகரை துணை மின்நிலையத்தில் இருந்து நகர் முழுவதும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்புவனம் நகர்பகுதியில் 50 ஆயிரம் இணைப்புகள் வரை உள்ளன.
மாவு அரைக்கும் அரவை மில், அரசு வங்கிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்திலும்கணினி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்கள், விற்பனை செய்யப்படும் பொருட்கள்உள்ளிட்ட அனைத்துமே கணினி மூலமாகவே கையாளப்படுகிறது.
திருப்புவனம் நகர் போலீஸ் ஸ்டேசனில் தினசரி பதிவு செய்யப்படும் வழக்குகள், புகார் விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு மாவட்ட தலைமையகத்திற்கு உடனுக்குடன் அனுப்பப்படும்,
நேற்றுமுன்தினம் நாள் முழுவதும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கணினி பயன்பாட்டில் உள்ள யூ.பி.எஸ்., உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதாகும் அபாயம் ஏற்பட்டது.
அடிக்கடி மின்சாரம் தடைபட்டதால் கணினியில் சேமிப்பு திறனும் பாதிக்கப்பட்டது. மின்சாரம் அடிக்கடி தடைபட்டது குறித்து மின்வாரியம் தரப்பில் எந்த வித பதிலும் தெரிவிக்கவில்லை.
எனவே மாவட்ட மின்வாரிய நிர்வாகம் திருப்புவனத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.