/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தொடர் மழையால் அணைக்கட்டில் தேங்கிய நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி தொடர் மழையால் அணைக்கட்டில் தேங்கிய நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் அணைக்கட்டில் தேங்கிய நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் அணைக்கட்டில் தேங்கிய நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் அணைக்கட்டில் தேங்கிய நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 05, 2024 04:59 AM

காரைக்குடி: காரைக்குடி ஓ. சிறுவயல் அருகே தேனாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டுவதற்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், நீர்வளத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த 2023 ம் ஆண்டு 5.42 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டப்பட்டது.
இதன் மூலம் ஒய்யகொண்டான் கண்மாய் உட்பட பல்வேறு கண்மாய்கள் பாசன வசதி பெறுவதோடு, 380.73 ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கு பயன்படும். தற்போது காரைக்குடி குன்றக்குடி ஓ. சிறுவயல் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. தேனாறு அணைக்கட்டில் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.