ADDED : ஜூலை 05, 2024 04:58 AM
காரைக்குடி: சாக்கோட்டை அருகேயுள்ள மணியாரம்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் பாண்டி 49.
சமையல் வேலை செய்து வந்தார். இவருக்கும் மனைவி தவமணிக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது.தவமணி ஆத்திரத்தில் விஷத்தை தின்றுள்ளார். இதனை அறிந்த அவரது மகன்கள் தவமணியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டிற்கு வந்த பாண்டி, தனது மனைவி விஷம் தின்ற தகவல் அறிந்து சோகத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். பாண்டியின் மகன் பெரியகருப்பன் கொடுத்த புகாரின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.