ADDED : ஜூலை 09, 2024 05:12 AM

இளையான்குடி: இளையான்குடி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அனைத்து டவுன் பஸ்களும் சென்று வர வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ.,சார்பில் கண்மாய்க்கரை பஸ் ஸ்டாப் அருகே மாவட்டச் செயலாளர் சதாம் உசேன்,மாவட்ட தலைவர் முகமது அசாருதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பின்னர் அப்பகுதியில மறியல் செய்ய முயன்ற போது இளையான்குடி போலீசார் அவர்களை தடுத்தனர்.