/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டி.பிரிட்டோ பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி டி.பிரிட்டோ பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
டி.பிரிட்டோ பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
டி.பிரிட்டோ பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
டி.பிரிட்டோ பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 23, 2024 05:24 AM

தேவகோட்டை: தேவகோட்டை டி.பிரிட்டோ மேல்நிலை பள்ளியில் நடந்த பொன்விழா ஆண்டில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ந டைபெற்றது.
இப்பள்ளியில் 1973- - 74 ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இங்கு, முன்னாள் தலைமை ஆசிரியர் மத்தாய் -அவர்களின் நுாற்றாண்டை முன்னிட்டு மாணவர்கள் சந்தித்து கொண்டனர். முன்னாள் மாணவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அண்ணாமலை தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர் மன்ற இயக்குனர் விக்டர் டிசோசா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சேவியர்ராஜ், பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா ஆசி வழங்கினர். முன்னாள் மாணவர்களான மரிய ஆசிர், பேராவூரணி எம்.எல்.ஏ., அசோக்குமார், ஆசிய தடகள வீரர் பத்மஸ்ரீ விருது பெற்ற சார்லஸ் புரோமியோ, டாக்டர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாணவர் ரெக்ஸ் நன்றி கூறினார். புத்தக கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.