ADDED : ஜூலை 25, 2024 04:31 AM
சிவகங்கை: சிவகங்கை பாசாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் காளிமுத்து 41. இவர் சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரி ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் தனது ஆட்டோவில் இருந்தபோது சிவகங்கை சி.பி,காலனியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அருண்குமார் 28, ராமர் மகன் கிருஷ்ணன் 28, முத்துக்குமார் மகன் அஸ்வின் 21 ஆகியோர் காளிமுத்துவை அசிங்கமாக பேசி தாக்கி காளிமுத்துவின் கையில் வாளால் வெட்டியுள்ளனர். சிவகங்கை போலீசார் அருண்குமார், கிருஷ்ணன், அஸ்வின் மூன்று பேரையும் கைது செய்தனர்.