/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை இணைபதிவாளர் தகவல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை இணைபதிவாளர் தகவல்
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை இணைபதிவாளர் தகவல்
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை இணைபதிவாளர் தகவல்
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை இணைபதிவாளர் தகவல்
ADDED : ஜூலை 15, 2024 04:08 AM
சிவகங்கை : சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் இக்கல்வி ஆண்டுக்கான உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இங்கு முழுநேர கூட்டுறவு மேலாண்மை ஒரு ஆண்டு பயிற்சி, 2 பருவங்களாக நடக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இதற்கு www.tncu.tn.gov.in@gmail.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றுகளின் ஒரிஜினல், நகலுடன் நேரடியாக சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்திற்கு வந்து சேர்க்கை செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு 97867 50554 ல் தொடர்பு கொள்ளலாம்.