ADDED : ஜூன் 16, 2024 04:51 AM

காரைக்குடி:காரைக்குடி நேஷனல் கேட்டரிங் அண்ட் பயர் சேப்டி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் சையது தலைமையேற்றார். இயக்குனர் மனோகர் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் தினேஷ் தொடங்கி வைத்தார். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அழகப்பா பல்கலை துணைப்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிட மணி, செயலாளர் கண்ணப்பன், பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரிமுதல்வர்கள் நவீன், தனசீலன் மற்றும் துறைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன் அபுபக்கர் சித்திக் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.