/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கட்டட மேஸ்திரி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் கட்டட மேஸ்திரி கொலை: தொழிலாளிக்கு ஆயுள்
கட்டட மேஸ்திரி கொலை: தொழிலாளிக்கு ஆயுள்
கட்டட மேஸ்திரி கொலை: தொழிலாளிக்கு ஆயுள்
கட்டட மேஸ்திரி கொலை: தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : மார் 13, 2025 02:46 AM

சிவகங்கை:தேவகோட்டையில் 2016ல் கட்டட மேஸ்திரியை கொலை செய்த தொழிலாளிக்கு சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புதுபையூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் என்ற சதாசிவம் 47. இவர் தேவகோட்டையில் கட்டட பணி செய்து வந்தார்.
இவரிடம் தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ராமு மகன் நாகராஜ் 38 பணிபுரிந்தார்.
இவருக்கு முறையாக காளிதாஸ் சம்பளம் வழங்கவில்லை. ஆத்திரம் அடைந்த நாகராஜ் தனது அண்ணன் கருப்பையாவுடன் 45, சென்று 2016 ஜூன் 3ல் தேவகோட்டையில் தெருவில் நின்று கொண்டிருந்த காளிதாசிடம் சம்பளம் குறித்து கேட்டார்.
அப்போது நாகராஜூக்கும் காளிதாசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாகராஜ் கத்தியால் குத்தியதில் காளிதாஸ் இறந்தார்.
தேவகோட்டை போலீசார் நாகராஜ், கருப்பையாவை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கு நடக்கும்போதே கருப்பையா இறந்துவிட்டார்.
நாகராஜ்க்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி அறிவொளி உத்தரவிட்டார்.