/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 21 பவுன் திருடிய நகை மதிப்பீட்டாளர் மீது வழக்கு 21 பவுன் திருடிய நகை மதிப்பீட்டாளர் மீது வழக்கு
21 பவுன் திருடிய நகை மதிப்பீட்டாளர் மீது வழக்கு
21 பவுன் திருடிய நகை மதிப்பீட்டாளர் மீது வழக்கு
21 பவுன் திருடிய நகை மதிப்பீட்டாளர் மீது வழக்கு
ADDED : ஜூன் 30, 2024 02:26 AM
சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது.
இவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக தெம்மாபட்டியைச் சேர்ந்த நாராயணகுமார் இரண்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். இவர் பிப்., முதல் ஜூன் வரை உள்ள காலகட்டத்தில் வங்கியில் நகை அடமானம் வைத்தவர்களின் நகைகளிலிருந்து சிறிது சிறிதாக 167.22 கிராம் 21 பவுன் 90 மில்லிகிராம் எடையுள்ள நகைகளை சிறிது சிறிதாக எடுத்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ. 11 லட்சத்து 13 ஆயிரத்து 655 ஆகும்.
இது தொடர்பாக கிளை மேலாளர் சரத்குமார் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.