/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எஸ்.எஸ்.கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம் எஸ்.எஸ்.கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்
எஸ்.எஸ்.கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்
எஸ்.எஸ்.கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்
எஸ்.எஸ்.கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஜூன் 10, 2024 06:18 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் ஏராளமான மாடுகள் பங்கேற்றன.
இங்குள்ள படைத்தலைவி அம்மன், கறுக்குமடை ஐயனார் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மேலூர் - திருப்புத்தூர் நெடுஞ்சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்பந்தயத்தில் 33 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சாரதி மற்றும் துணை சாரதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பந்தயத்திற்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ்.கோட்டை கிராமத்தார்கள் செய்திருந்தனர்.