ADDED : ஜூலை 12, 2024 04:27 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே டி.ஆலங்குளம் கிராமத்தில் நேற்று காலை மணல் லாரி மோதியதில் ரோட்டில் நின்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் தயாஆனந்த், (இரண்டரை வயது) அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். நேற்று காலை அங்கன்வாடிக்கு செல்ல ரோட்டில் நின்ற போது அதே தெருவில் கட்டுமான பணிக்காக எம் சாண்ட் மணல் இறக்கிய லாரி சற்று பின்னோக்கி நகர்ந்ததில் லாரி டயரில் சிக்கி சிறுவன் உயிரிழந்தார்.
சிறுவனின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி விட்டார். திருப்புவனம் போலீசார் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சிறுவனின் உடல் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.