ADDED : ஜூலை 31, 2024 04:47 AM

சிவகங்கை : சிவகங்கையில், தபால் துறை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன் துவங்கிய ஊர்வலத்தை உதவி கோட்ட கண்காணிப்பாளர் எம்.சித்ரா துவக்கி வைத்தார். உதவி கோட்ட கண்காணிப்பாளர் டி.வெங்கடேசன், தபால் கோட்ட ஆய்வாளர் போற்றிராஜா, சிவகங்கை மருத்துவமனை ஆய்வக நுட்புனர் முருகதாஸ் உட்பட தபால் துறை ஊழியர், அரசு மருத்துவமனை லேப்டெக்னீசியன் மாணவர்கள் பங்கேற்றனர்.
* காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காரைக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருள்தாஸ் தொடங்கி வைத்தார். காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் தலைமையேற்றார். காரைக்குடி கோட்ட துணை கண்காணிப்பாளர் விஜயகோமதி உப கோட்ட ஆய்வாளர் சென்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் உடல் உறுப்பு தான உறுதிமொழி எடுக்கப்பட்டது.