ADDED : ஜூலை 31, 2024 04:53 AM
சிவகங்கை, : திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷன் எல்கைக்குட்பட்ட மாத்துாரில் கடந்த மே மாதம் வேல்முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசைமுத்துவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் பி.வேளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைமுத்து 24. இவர் கடந்த மே மாதம் மாத்துார் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட வேல்முருகன் என்பவரின் கொலை வழக்கில் உள்ளார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரை செய்தார். கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். ஆசைமுத்து மீது கொலை உள்ளிட்ட பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.