தேவகோட்டை: தேவகோட்டை சன்மார்க்க சங்க ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பரிசளிப்பு விழா சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. ஜமீன்தார் சோமநாராயணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பழநி ராகுலதாசன் வரவேற்றார்.
தட்சிணாமூர்த்தி அறிக்கை வாசித்தார். பாலசுப்பிரமணியம் பாடல்கள் பாடினார். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பரிசு வழங்கினார்.
நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், டாக்டர் பெரியசாமி, அய்யாச்சாமி, ஆசிரியர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். எழுத்தாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் நன்றி கூறினார்.