Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அலங்கார அன்னை சர்ச் விழா  கொடியேற்றத்துடன் துவக்கம் ஆக., 14 ல் தேர்பவனி   

அலங்கார அன்னை சர்ச் விழா  கொடியேற்றத்துடன் துவக்கம் ஆக., 14 ல் தேர்பவனி   

அலங்கார அன்னை சர்ச் விழா  கொடியேற்றத்துடன் துவக்கம் ஆக., 14 ல் தேர்பவனி   

அலங்கார அன்னை சர்ச் விழா  கொடியேற்றத்துடன் துவக்கம் ஆக., 14 ல் தேர்பவனி   

சிவகங்கை : சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் நேற்று மாலை கொடியேற்றம், சிறப்பு திருப்பலியுடன் திருவிழா தொடங்கியது. ஆக., 14 அன்று தேர்பவனி நடைபெறும்.

இங்கு நேற்று மாலை 5:30 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப் கொடியேற்றினார். சிறப்பு திருப்பலியுடன் திருவிழா தொடங்கியது. பங்கு தந்தையர் சேசுராஜா, கிளிண்டன் முன்னிலை வகித்தனர். இன்று முதல் ஆக., 13ம் தேதி வரை மாலை 6:00 மணிக்கு திருச்செபமாலை, மாலை 6:30 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும். ஆக., 11 அன்று மாலை 6:00 மணிக்கு புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளியில் திருப்பலியும், பேராலயம் நோக்கி நற்கருணை பவனியும் நடைபெறும். ஆக., 14 அன்று மாலை 5:30 மணிக்கு திருப்பலி கருத்துக்கள் வாசிக்கப்படும். மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலிக்கு பின், அலங்கார அன்னையின் தேர்பவனி நடைபெறும். சர்ச்சில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் சர்ச்சிற்கு தேர்பவனி சென்று சேரும். தினமும் நடக்கும் சிறப்பு திருப்பலியில் சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் பிஷப் எஸ்.சூசைமாணிக்கம், பங்கு தந்தை அருள்ஜோசப், பெனடிக்ட் பர்னபாஸ், சேவியர், கிளிண்டன், சேசு, இன்பென்ட், மரியடெல்லஸ், செபாஸ்டின், மரிய அந்தோணி, மறை மாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் பால்ராஜ், அருள் ஆனந்த், தைரியம் பங்கேற்கின்றனர்.

ஆக., 15 அன்று காலை 7:30 மணிக்கு நன்றி திருப்பலியில் சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் ஆசியுரை வழங்குகிறார். பின்னர் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். அருட்சகோதரி, சகோதரர்கள், பங்கு பேரவை, இறை மக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us