/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மேலநெட்டூர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவம் மேலநெட்டூர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவம்
மேலநெட்டூர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவம்
மேலநெட்டூர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவம்
மேலநெட்டூர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவம்
ADDED : ஜூன் 14, 2024 05:04 AM

மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மேலநெட்டூர் சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனியில் பிரம்மோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை சுவாமிகளுக்கு பால் பன்னீர் சந்தனம் குங்குமம் திரவியம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னர் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்ற பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 20ம் தேதியும், ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம் ஜூன் 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது.விழா நாட்களின் போது சாந்தநாயகி அம்மன் சொர்ண வாரீஸ்வரர் உற்சவர் சுவாமிகள் தினம் தோறும் சிம்மம், அன்னம், கமலம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், செல்லப்பா குருக்கள் மற்றும் மேலநெட்டூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.