/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆதிதிராவிடர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பதிவு ஆதிதிராவிடர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பதிவு
ஆதிதிராவிடர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பதிவு
ஆதிதிராவிடர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பதிவு
ஆதிதிராவிடர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பதிவு
ADDED : ஜூன் 01, 2024 04:40 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் இத்துறையின் கீழ் 3 தொடக்க, 2 உயர்நிலை, 1 மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிகளில் 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீத முன்னுரிமையும், 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க 7.5 சதவீத முன்னுரிமையும், பெண் கல்வியை ஊக்குவிக்க ஊக்க தொகையும், 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை, சீருடை, பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. எனவே 5 வயதிற்கு மேற்பட்ட தங்கள் குழந்தைகளை ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் சேர்த்து பயன்பெறுங்கள்.