/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புதுப்பட்டி, மதகுபட்டியில் ஜல்லிக்கட்டு 850 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு புதுப்பட்டி, மதகுபட்டியில் ஜல்லிக்கட்டு 850 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு
புதுப்பட்டி, மதகுபட்டியில் ஜல்லிக்கட்டு 850 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு
புதுப்பட்டி, மதகுபட்டியில் ஜல்லிக்கட்டு 850 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு
புதுப்பட்டி, மதகுபட்டியில் ஜல்லிக்கட்டு 850 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 01, 2024 04:41 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே புதுப்பட்டி, மதகுபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் முட்டியதில் 47 பேர் காயமுற்றனர். இதில், 5 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 850 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை அருகே புதுப்பட்டி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், மாடு பிடி வீரர்கள் 300 பேர் பங்கேற்றனர். வாடிவாசல் வழியே ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், பெரும்பாலான காளைகள் நின்று விளையாடி, மாடுபிடி வீரர்களை துாக்கி வீசியது. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது.
கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பிரேம்குமார், சைலேஷ் பாபு தலைமையில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர் மதுரை கருமாத்துார் கார்த்திக் 22, திண்டுக்கல் வெயிலடுச்சான்பட்டி முகில்வண்ணன் 28, திண்டுக்கல் அய்யம்பாளையம் சிவமணி 25 உட்பட 29 பேர் காயமுற்றனர். பலத்த காயமுற்ற 2 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கால்நடை துறை உதவி இயக்குனர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் டாக்டர்கள், ஜல்லிகட்டு காளைகளை பரிசோதனை செய்தனர். வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர், மாடுபிடி வீரர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.
மதகுபட்டி
மதகுபட்டி கீழத்தெரு பூங்குன்ற அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை அடக்கினர். கிராம தலைவர் முத்துக்குமார் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது.
மண்டல துணை தாசில்தார் சங்கர் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் பிரதீப், கிேஷார்குமார் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடை டாக்டர் குணசேகரன் தலைமையில் டாக்டர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர்.
இங்கு காளைகள் முட்டியதில் 18 பேர் காயமுற்றனர். இதில், பலத்த காயமுற்ற 3 பேரை சிவகங்கைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.