/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆடி துவங்கியது கோயில்களில் குவிந்த பக்தர்கள் ஆடி துவங்கியது கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி துவங்கியது கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி துவங்கியது கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி துவங்கியது கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 18, 2024 07:16 AM

காரைக்குடி : காரைக்குடியில் ஆடி துவங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததோடு கூழ் ஊற்றி நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி வெள்ளி, செவ்வாய் கிழமைகளில், அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறுவதோடு ஏராளமான பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக் கடன் செலுத்துவர் . காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஆண்டுதோறும் மஞ்சள் அபிஷேகம், பால்குடம், விளக்கு பூஜை உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
முதல் வெள்ளியன்று அம்மனுக்கு பச்சை மஞ்சள் அரைத்து அபிஷேகம் செய்யப்படும். இந்த மஞ்சளை அரைக்கும் பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபடுவர். நேற்று அபிஷேகத்திற்காக மஞ்சள் தயார் செய்யும் பணி நடந்தது.