/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரம் சிவகங்கை டூ பெங்களூரு சென்றன பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரம் சிவகங்கை டூ பெங்களூரு சென்றன
பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரம் சிவகங்கை டூ பெங்களூரு சென்றன
பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரம் சிவகங்கை டூ பெங்களூரு சென்றன
பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரம் சிவகங்கை டூ பெங்களூரு சென்றன
ADDED : ஜூன் 19, 2024 05:06 AM
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தேர்தல் மாதிரி ஓட்டுப்பதிவுக்கு முன் பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது பார்ப்பதற்காக நேற்று பெங்களூரூ அனுப்பி வைக்கப்பட்டது.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் 1,873 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த, ஓட்டுச்சாவடிக்கு தலா 2 ஓட்டுப்பதிவு இயந்திரம், தலா ஒரு கட்டுப்பாட்டு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. தேர்தலுக்கு முன் அவற்றில் இருந்து மாதிரி ஓட்டுப்பதிவுகள் நடத்தப்பட்டன. அவற்றில் 38 ஓட்டுப்பதிவு இயந்திரம், 35 கட்டுப்பாட்டு இயந்திரம், 71 ஓட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் பழுதானதாக கண்டறியப்பட்டது. இவற்றை அப்படியேசிவகங்கை தாசில்தார் அலுவலகத்தில் வைத்திருந்தனர். இந்த இயந்திரங்களை பழுது பார்ப்பதற்காக பெங்களூரூ பெல் நிறுவனத்திற்கு அனுப்ப தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று காலை வாகனத்தின் மூலம் பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன.