/உள்ளூர் செய்திகள்/சேலம்/மண்டல கூட்டுறவு பணியாளர் குறைகள் தீர்க்க இன்று முகாம்மண்டல கூட்டுறவு பணியாளர் குறைகள் தீர்க்க இன்று முகாம்
மண்டல கூட்டுறவு பணியாளர் குறைகள் தீர்க்க இன்று முகாம்
மண்டல கூட்டுறவு பணியாளர் குறைகள் தீர்க்க இன்று முகாம்
மண்டல கூட்டுறவு பணியாளர் குறைகள் தீர்க்க இன்று முகாம்
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
சேலம்: தமிழக சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர், கடந்த ஜூன், 27ல், கூட்டுறவு சங்கம்/வங்கி பணியாளர் நலன் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, 'கூட்டுறவு சங்க பணியாளர் குறைகளை தீர்க்க, 2 மாதங்களுக்கு ஒருமுறை, மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கைப்படி, 'பணியாளர் நாள் நிகழ்ச்சி', சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அழகாபுரத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. அதில் சேலம் மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டோர், குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கலாம். இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாணை, பதிவாளர் கடிதங்கள் சுற்றறிக்கைக்கு உட்பட்டு, உடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சேலம் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.