/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 03, 2025 02:29 AM
சேலம், சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் அறிக்கை:
செயற்கை உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து, இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் உயிர்ம எருக்களை பயன்படுத்துதல் மூலம் பயிர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு செய்வதோடு மண் வளத்தையும் பாதுகாப்பது உயிர்ம வேளாண்மை.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தது ஒரு ஏக்கரில், உயிர்ம வேளாண் சாகுபடி செய்வதோடு மட்டுமின்றி, முழு நேர உயிர்ம விவசாயியாகவும் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம், 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருப்பதோடு, உயிர்ம வேளாண் சான்று பெற்றிருக்க வேண்டும். அத்தகைய விவசாயிக்கு நம்மாழ்வார் விருது வழங்கி தமிழக அரசு ஊக்கப்படுத்துகிறது.
மாநில அளவில் தேர்வாகும், 3 விவசாயி
களுக்கு, தமிழக அரசு நம்மாழ்வார் விருது வழங்க உள்ளது. இதற்கு, 2 லட்சம் ரூபாய் பரிசாக கிடைக்கும். அத்துடன் சான்றிதழ், பதக்கம் ஆகியவை, குடியரசு நாளில், தமிழக முதல்வரால் வழங்கப்படும்.
விருதுக்கான தகுதியான விவசாயிகள், 'அக்ரிஸ்நெட்' வலை
தளத்தில் வரும், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு கட்டணம், 100 ரூபாய். தகவலுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.