/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பிளஸ் 2 மாணவர் தற்கொலை பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு பிளஸ் 2 மாணவர் தற்கொலை பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு
பிளஸ் 2 மாணவர் தற்கொலை பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு
பிளஸ் 2 மாணவர் தற்கொலை பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு
பிளஸ் 2 மாணவர் தற்கொலை பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : செப் 03, 2025 02:28 AM
மேட்டூர், கொளத்துார், மூலக்காட்டை சேர்ந்த தமிழரசியின் மகன் நிகாஷ், 17. கொளத்துார் அரசு நிதி உதவி பெறும் நிர்மலா பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவரது தந்தை லோகநாதன், 6 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் சின்னமேட்டூரில் உள்ள தாய் ரங்காயி வீட்டில் வசித்த தமிழரசி, கூலி வேலைக்கு சென்றார். கடந்த, 29ல் பள்ளி சென்ற நிகாஷ், காலை, 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டார்.
இதுகுறித்து தமிழரசி, சகோதரர் ரமேஷ் ஆகியோர், வகுப்பாசிரியர் சரவணனை சந்தித்து விளக்கம் கேட்டனர். அப்போது அவர், 'மாணவருக்கு தவறான பழக்கம் உள்ளது' என்றார். தொடர்ந்து, 29 அன்று பள்ளிக்கு வராததற்கு விடுப்பு கடிதத்தை கொடுத்தனர். ஆசிரியர் வாங்காமல், தலைமை ஆசிரியர் கிறிஸ்டிராஜை பார்க்கும்படி கூறியுள்ளார்.
அவரும், 'நிகாஷ் பழக்க வழக்கம் சரியில்லை. கண்டித்து வையுங்கள். அடுத்த வாரம் தேர்வு எழுத அனுப்பி வையுங்கள்' என கூறி விட்டார். இதனால் வீடு திரும்பிய நிகாஷ், விரக்தியில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழரசி புகார்படி கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிர்மலா பள்ளி நுழைவாயில் முன் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மாணவர் சடலம், அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.