/உள்ளூர் செய்திகள்/சேலம்/உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணிஉலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 01, 2024 06:34 AM
சேலம் : உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்டம், இளம் இந்தியர்கள், ரோட்ராக்ட் கிளப் அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு பேரணி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்பாள், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு ஆலோசகர் அஸ்வந்த் வெற்றிவேல் தொடங்கி வைத்தனர்.சேலம் மாநகர வடக்கு போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் பிரதாப்சிங், சேலம் மாவட்ட சுகாதார கல்வியாளர் பிலவேந்திரன், மாவட்ட சமூக சேவகர் ஹரிநாத் உள்பட பலர் பங்கேற்றனர். சேலம், 5 ரோட்டில் தொடங்கிய பேரணி, புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முடிந்தது.இதில் துறையை சேர்ந்த மாணவ மாணவியர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச்சென்றனர். தொடர்ந்து சேலம் சம்பந்தம் நுாற்பாலையில் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில் துறை உதவி பேராசிரியர் ஜெயபாலன், புகையிலை பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாட்டை, துறை இளம் இந்தியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தீபிகா, விக்னேஷ்வரா, நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், ரோட்ராக்ட் கிளப் ஆலோசகர் சுரேந்தர் செய்திருந்தனர்.