/உள்ளூர் செய்திகள்/சேலம்/மண்ணெண்ணெய் வாங்க மூதாட்டிகள் திண்டாட்டம்; ரேஷன் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கைமண்ணெண்ணெய் வாங்க மூதாட்டிகள் திண்டாட்டம்; ரேஷன் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை
மண்ணெண்ணெய் வாங்க மூதாட்டிகள் திண்டாட்டம்; ரேஷன் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை
மண்ணெண்ணெய் வாங்க மூதாட்டிகள் திண்டாட்டம்; ரேஷன் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை
மண்ணெண்ணெய் வாங்க மூதாட்டிகள் திண்டாட்டம்; ரேஷன் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை
ADDED : ஜூன் 01, 2024 06:34 AM
சேலம் : 'காலைக்கதிர்' செய்தியால் வடக்கு அம்மாபேட்டை ரேஷன் மண்ணெண்ணெய் நிலைய விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாரத்தில், 2 நாள் மண்ணெண்ணெய் வினியோகிக்க, விற்பனையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் தாலுகா பொன்னம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறையில், அம்மாபேட்டை நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் வடக்கு அம்மாபேட்டை மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் உள்ளது. அங்கு மாதம் முழுதும் மண்ணெண்ணெய் வழங்குவதில்லை. இதனால் கடந்த, 29ல், மண்ணெண்ணெய் வாங்க வந்த மூதாட்டிகள், 'டோக்கன்' பெறுவதற்கு காத்திருந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முண்டியடித்து சென்ற மூதாட்டிகள், ஒருவர் மீது ஒருவராக தடுமாறி விழுந்தனர். தவிர கார்டுகளுக்கு மண்ணெண்ணெய் அளவும் குறைத்து வழங்குவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த மே, 30ல், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சேலம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் காயத்ரி, நேற்று மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்துக்கு சென்று விற்பனையாளர் சேகர், நுகர்வோரிடம் விசாரணை செய்தார். பின் விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், சேலம் கூட்டுறவுத்துறை, மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமாருக்கு அறிக்கை அளித்தார்.
இதுகுறித்து காயத்ரி கூறுகையில், ''விற்பனையாளர் சேகர், மற்றொரு ரேஷன் கடையிலும் பணிபுரிகிறார். அவர், மாதம் ஒருமுறை மண்ணெண்ணெய் வினியோகிப்பதாக கூறினார். இதனால் ஜூன் முதல், வாரத்தில் இரு நாள், 'டோக்கன்' முறையில், மண்ணெண்ணெய் வழங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனையாளர் மீது மேல்நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்பியுள்ளோம்,'' என்றார்.