/உள்ளூர் செய்திகள்/சேலம்/20 ரூபாய்க்கு சரிந்தது அரளி வேலை இழந்த தொழிலாளர்கள்20 ரூபாய்க்கு சரிந்தது அரளி வேலை இழந்த தொழிலாளர்கள்
20 ரூபாய்க்கு சரிந்தது அரளி வேலை இழந்த தொழிலாளர்கள்
20 ரூபாய்க்கு சரிந்தது அரளி வேலை இழந்த தொழிலாளர்கள்
20 ரூபாய்க்கு சரிந்தது அரளி வேலை இழந்த தொழிலாளர்கள்
ADDED : ஜூன் 18, 2024 07:10 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 1,100 ஏக்கரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்து, தமிழகம் முழுவதும் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தினமும் அதிகாலையில் அரளி பறிக்கும் தொழிலில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.ஒரு கிலோ அரளி பறிக்க, 50 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. கிராம மக்களின் வருவாய் ஆதாரம் அரளியை நம்பி உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால், அரளி உற்பத்தி அதிகரித்துள்ளது. மகசூல் அதிகரித்த நிலையில், பூ நுகர்வு அதிகரிக்காததால் விலை சரிந்துள்ளது.சேலத்தில் ஒரு கிலோ அரளி கடந்த 14, 15ல், 30 ரூபாய், 16, 17ல், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அரளி விலை, பூ பறிக்கும் கூலியை விட கீழ் சரிந்தது. செடியிலிருந்து பூ பறிப்பதை விவசாயிகள் கைவிட்டனர். கூலி தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.