Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தேசிய ஜூனியர் கபடிக்கு தொழிலாளி மகன் தேர்வு

தேசிய ஜூனியர் கபடிக்கு தொழிலாளி மகன் தேர்வு

தேசிய ஜூனியர் கபடிக்கு தொழிலாளி மகன் தேர்வு

தேசிய ஜூனியர் கபடிக்கு தொழிலாளி மகன் தேர்வு

ADDED : ஜூன் 26, 2025 02:17 AM


Google News
வீரபாண்டி, இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியை சேர்ந்த, தறித்தொழிலாளி வெங்கடேஷ், 50. இவரது மனைவி பாக்யலஷ்மி, 45. இவர்களது மகன் மெய்யரசன், 17. இவர் பள்ளி படிப்பை முடித்த நிலையில், கல்லுாரிக்கு செல்ல உள்ளார்.

கடந்த, 5, 6ல், மகுடஞ்சாவடி அருகே, அ.தாழையூரில் உள்ள சாமி அகாடமியில், தமிழக அமெச்சூர் கபடி கழகம் சார்பில், 18 வயதுக்கு உட்பட்ட கபடி வீரர்கள் தேர்வு நடந்தது. அதில், 300 பேர் பங்கேற்ற நிலையில், மெய்யரசன் உள்பட, 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த, 10 முதல், 23 வரை, திருச்சி, மணப்பாறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், 14 பேர் அடங்கிய தமிழக அணிக்கு, மெய்யரசன் தேர்வானார். அவர், வரும், 28, 29ல், உத்ரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடக்க உள்ள தேசிய ஜூனியர் கபடியில் பங்கேற்க, நேற்று சேலத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us