தொழிலாளி தற்கொலை உறவினர்கள் கோஷம்
தொழிலாளி தற்கொலை உறவினர்கள் கோஷம்
தொழிலாளி தற்கொலை உறவினர்கள் கோஷம்
ADDED : ஜூன் 01, 2025 01:37 AM
சேலம், இடங்கணசாலை நகராட்சி மாட்டையாம்பட்டியை சேர்ந்தவர் மணி, 52 தறித்தொழிலாளியான இவர், ராசிபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தவணை செலுத்தி வந்தார். கடந்த மாத தவணை செலுத்தாதால், அந்த நிறுவன ஊழியர்கள், மணியிடம் கேட்டு, சில நாட்களாக நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த வேதனையில் மணி நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது மனைவி மகேஸ்வரி, 37, உள்ளிட்ட உறவினர்கள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு, 'மணி உடலை வாங்க மாட்டோம்' என கோஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.