/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது
ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது
ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது
ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது
ADDED : ஜூன் 01, 2025 01:37 AM
சேலம், இடைப்பாடி, குருமம்பட்டியை சேர்ந்த, மாற்றுத்திறனாளி கோபாலகிருஷ்ணன், 18. நேற்று முன்தினம் அரசு பஸ்சில், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரிடமிருந்த மொபைல் போனை, 2 பேர் திருடினர். இதை கவனித்து கோபாலகிருஷ்ணன் கூச்சலிட, சக பயணியர், இருவரையும் பிடித்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தஞ்சாவூர், சியாரமங்கலத்தை சேர்ந்த சக்திவேல், 47, சேலம் மாவட்டம் வளையமாதேவி பூபதி, 37, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.