/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு
மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு
மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு
மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு
ADDED : ஜூன் 17, 2025 01:10 AM
மேட்டூர்,மனைவி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதால், விரக்தியடைந்த தொழிலாளி விஷ மாத்திரைகள் சாப்பிட்டு இறந்தார்.
மேட்டூர், குள்ளவீரன்பட்டி கூலி தொழிலாளி ஆரோக்கியசாமி, 48. இவர் கடந்த, 2010ல் கேரளாவை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மேட்டூர், குள்ளவீரன்பட்டியில் வசித்தார். தம்பதியருக்கு சுஜன், சுஜித்ரா என்ற மகன், மகள் உள்ளனர்.
தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த, 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். சில வாரங்களுக்கு முன்பு, மகாலட்சுமி தனது குழந்தைகளுடன் கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஆரோக்கியசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மதுவுடன், தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.