/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ம.க.,வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ம.க.,வினர்
உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ம.க.,வினர்
உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ம.க.,வினர்
உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ம.க.,வினர்
ADDED : ஜூன் 17, 2025 01:09 AM
இடைப்பாடி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க மறுத்ததால், நேற்று தேவூர் போலீஸ் ஸ்டேஷனை, பா.ம.க.,வினர் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், தேவூரில், 1998ம் ஆண்டுக்கு முன் சித்த மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அதே ஆண்டில், தேவூரில் போலீஸ் ஸ்டேஷன் துவங்கியபோது, சித்த மருத்துவமனை இருந்த இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் சித்த மருத்துவம் அப்போதிலிருந்து நிறுத்தப்
பட்டது.
இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன் 2024 டிசம்பர் வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. இதனால் கடந்த, 27 ஆண்டுகளாக சித்த வைத்தியம் பார்க்க வசதி இல்லாமல், தேவூர் பகுதி மக்கள் இடைப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி நகரங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், சித்த மருத்துவமனை கட்டடத்தில் செயல்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு, வேறு இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு, அங்கு கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இதனால் பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பயன்பாடு இன்றி உள்ளது. எனவே, தேவூரை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில், மீண்டும் சித்த மருத்துவமனை செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, பா.ம.க., மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன் கடந்த, 8ல் தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுத்தார்.
இன்று போராட்டம் நடைபெற உள்ள நிலையில், நேற்று உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்த தேவூர் போலீசார், அத்தகவலை லட்சுமணன் வீட்டு முன்புறம் நோட்டீஸில் ஒட்டி விட்டு வந்துள்ளனர். இதையடுத்து, சேலம் தெற்கு மாவட்ட பா.ம.க., செயலர் செல்வகுமார், மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன், ஒன்றிய செயலர் கராத்தே பூபதி, நகர செயலர்கள் சேகர், சேட்டு உள்ளிட்ட பா.ம.க.,வினர் நேற்று தேவூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
அப்போது, எஸ்.ஐ., அருண்குமாரிடம் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என கேட்டனர். உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்ட இடத்திற்கு முன்புறம், பள்ளி உள்ளதால் அனுமதி மறுத்துள்ளதாக எஸ்.ஐ., தெரிவித்தார்.
இதையடுத்து, மாவட்ட செயலர் செல்வகுமார் கூறுகையில்,'' நாங்கள் உண்ணாவிரதம் நடத்துவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்,'' என்றார். இதையடுத்து, பா.ம.க.,வினர் கலைந்து சென்றனர்.