/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலவச வீட்டு மனை கிடைக்குமா? மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்இலவச வீட்டு மனை கிடைக்குமா? மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
இலவச வீட்டு மனை கிடைக்குமா? மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
இலவச வீட்டு மனை கிடைக்குமா? மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
இலவச வீட்டு மனை கிடைக்குமா? மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 24, 2024 03:15 AM
சேலம்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம், கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.
அதில் மாநில தலைவர் ராஜரத்தினம் பேசியதாவது:
கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் மாற்றுத்திறனாளிகள், 50 பேருக்கு வீட்டுமனை கேட்டு மனு கொடுத்து ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை. பூங்கா, வணிக வளாகம், ஏ.டி.எம்., மையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வர, சாய்வு தளவசதி, தடையில்லா சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருவாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என இருவகை ஓய்வூதியம் கேட்டு, 6 மாதங்களுக்கு முன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும். சேலம் புது பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளி வியாபாரம் செய்ய கடை ஒதுக்க வேண்டும். தாலுகா அளவில் வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கோரிக்கையை வலிறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட துணைத்தலைவர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா, பொருளாளர் சுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.