Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா இன்று துவக்கம்

ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா இன்று துவக்கம்

ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா இன்று துவக்கம்

ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா இன்று துவக்கம்

UPDATED : செப் 22, 2025 12:07 AMADDED : செப் 21, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: நாடு முழுதும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் இன்று( செப்., 22) அமலாக உள்ளது. அதில் பல பொருட்கள் மீதான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக இருக்கும்.

90 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்புக்குள் வந்துள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 33 விதமான உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு முழு வரிவிலக்கு; அதாவது, 'ஜீரோ' வரி. சில உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் கார், இரு சக்கர வாகனம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறைகிறது.

ஜி.எஸ்.டி.,யில் மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய சீர்திருத்தம், இன்று (செப்டம்பர் 22 )முதல் நாடு முழுதும் அமலுக்கு வருகிறது.

5 சதவீதம் இருந்து, இப்போது பூஜ்யம் சதவீதம் ஆக்கப்பட்டுள்ள பொருட்கள்


1.யு.எச்.டி., பால்

2.சென்னா, பனீர்

3.பீஸா பிரெட்

4.கக்ரா, சப்பாத்தி அல்லது ரொட்டி

5.அகல்சிடேஸ் பீட்டா, இமிகுளுசீரேஸ்

6.எரேசர்கள் (அழிப்பான்)

18 சதவீதம் இருந்து, இப்போது பூஜ்யம் சதவீதம் ஆக்கப்பட்டுள்ள பொருட்கள்


1.தனி நபர் சுகாதார காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு

2.பரோட்டா, இந்திய பிரெட்

12 சதவீதம் இருந்து, இப்போது பூஜ்யம் சதவீதம் ஆக்கப்பட்டுள்ள பொருட்கள்


1. மொத்தம் 33 வகை மருந்துப்பொருட்கள்

2.அன்கோட்டட் காகிதம், எக்சர்சைஸ் புத்தகம், கிராப் புத்தகம், லேப் புத்தகம், நோட்டு புத்தகம் தயார் செய்வதற்கான காகிதம்

3.மேப், ஹைட்ரோகிராபிக் அல்லது அதுபோன்ற சார்ட், அட்லாஸ், சுவர் மேப், டோபோகிராபிக்கல் பிளான், குளோப்.

4.பென்சில் ஷார்ப்னர்கள்

5.பென்சில்கள், கிரையான், பேஸ்டல், டிராயிங் சார்கோல், எழுதும் மற்றும் வரையும் சாக், டெய்லர் சாக், சாக் ஸ்டிக்.

விலை குறையும் பொருட்கள்


* ரெடிமேட் பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறையும்.

* சாக்லேட்டுகள், பாஸ்தா, ரெடிமேட் நுாடுல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால், அவற்றின் விலையும் குறையும்.

* நெய், வெண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலையும் குறையும். உதாரணத்துக்கு, 1 கிலோ நெய்- 40 - 50 ரூபாய் வரை குறையும்.

* உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும். 'ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின்' மற்றும் 32 அங்குலத்துக்கு மேல் உள்ள 'டிவி'க்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம் ஆகியவை மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைந்துள்ளது.

* ஆடம்பர கார்களை தவிர, 1,200 'சிசி'க்கும் குறைவாக உள்ள கார்கள் மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், விலை குறையும்.

* 350 'சிசி'க்கு உட்பட்ட இருசக்கர வாகனம் மீதான வரி, 28-ல் இருந்து 18 ஆக குறைந்து விட்டது. அதனால், அதன் விலை 10,000 - 30,000 ரூபாய் வரை குறையும்.

* மருத்துவ உபகரணங்கள், தெர்மா மீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவை 18 மற்றும் 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும்.

* மூக்கு கண்ணாடி, லென்சுகள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.

* பென்சில், ரப்பர், 'மேப்' மீதான வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

* சோப்பு, டூத் பேஸ்ட், ஷாம்பு போன்ற பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும்.

* பானை, குக்கர், தட்டு, கரண்டி, அடுப்பு, கண்ணாடி, கத்தி, மேசை கரண்டி விலை குறையும்.

* சைக்கிள் 12 - 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக 1,000 - 3,500 ரூபாய் வரை விலை குறையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us