/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வேலைக்கு சென்று குவைத்தில் தவிக்கும் கணவரை மீட்டுத்தர மனைவி கோரிக்கை வேலைக்கு சென்று குவைத்தில் தவிக்கும் கணவரை மீட்டுத்தர மனைவி கோரிக்கை
வேலைக்கு சென்று குவைத்தில் தவிக்கும் கணவரை மீட்டுத்தர மனைவி கோரிக்கை
வேலைக்கு சென்று குவைத்தில் தவிக்கும் கணவரை மீட்டுத்தர மனைவி கோரிக்கை
வேலைக்கு சென்று குவைத்தில் தவிக்கும் கணவரை மீட்டுத்தர மனைவி கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2025 01:57 AM
தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசல், முஸ்லிம் தெருவை சேர்ந்த, தி.மு.க.,வின், சிறுபான்மை பிரிவு, முன்னாள் ஒன்றிய செயலர் அன்வர்பாஷா. இவரது மகன் அப்துல் ரகுமான், 32. இவர், 4 மாதங்களுக்கு முன், குவைத் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு சென்றார். தற்போது அவர், குடும்பத்தினருக்கு, வீடியோ பதிவு அனுப்பியுள்ளார்.
அதில், 'டிரைவர் வேலை என, குவைத் நாட்டுக்கு அழைத்துச்சென்றனர். விசா எடுத்த இடத்தை தவிர்த்து, வேறு இடத்துக்கு சென்றனர். இதுபற்றி கேட்டபோது உணவு தராததோடு, 'இங்கிருந்து உயிருடன் செல்ல முடியாது' என கூறி, விசா, பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துள்ளனர். என் மீது புகார் கொடுத்துள்ளதாகவும், சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டுகின்றனர். சிறைக்கு சென்றால் ஏதாவது ஆகிவிடும் என்று அச்சமாக உள்ளது. என்னை உயிருடன், தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும். தமிழக முதல்வர், என்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, குவைத் நாட்டில் உள்ள இந்திய துாதரகத்திலும், அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து, புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் அப்துல் ரகுமானின் மனைவி ரோஷினா பேகம், நேற்று தலைவாசல் போலீஸ் ஸ்டேஷன், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 'என் கணவரை உயிருடன் மீட்டுத்தர வேண்டும்' என, மனு அளித்தார்.