/உள்ளூர் செய்திகள்/சேலம்/கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஜூன் 04, 2025 01:57 AM
சேலம், சேலம், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம், வரும், 6ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த, 1ல் கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. நேற்று காலை, 8:30 மணிக்கு, கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள், குடங்களில் புனிதநீரை நிரப்பினர். தொடர்ந்து குதிரை, பசு உள்ளிட்டவை முன்னே செல்ல, ஏராளமான பெண்கள், 'ஓம்சக்தி பராசக்தி' கோஷம் முழங்க, தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
இதில், 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள், கடவுள் வேடம் அணிந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கியபடி சென்றனர்.
மாநகராட்சி அலுவலகம், செவ்வாய்ப்பேட்டை வழியே, அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலை அடைந்தது. நேற்று மாலை, முதல் கால யாகபூஜை தொடங்கியது. இன்று, 2, 3ம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை, 4, 5ம் கால பூஜைகள், மூலவர் மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கும். 6 காலை, 6:30 மணிக்கு, 6ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடையும். காலை, 7:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, 7:20க்கு மேல் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. தீர்த்தக்குட ஊர்வலத்தின் இடையே, இரு கோஷ்டிகள் இடையே நடனம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். பின், இரு கோஷ்டியினரையும் மக்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.