/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மரத்தின் மீது ஆம்னி வேன் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலி மரத்தின் மீது ஆம்னி வேன் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலி
மரத்தின் மீது ஆம்னி வேன் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலி
மரத்தின் மீது ஆம்னி வேன் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலி
மரத்தின் மீது ஆம்னி வேன் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலி
ADDED : ஜூன் 10, 2025 01:07 AM
ஆத்துார், சாலையோர புளிய மரத்தின் மீது, ஆம்னி வேன் மோதிய விபத்தில், கணவர் கண் எதிரே மனைவி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி, வடக்கு பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நசீர், 52. சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி ஷகிராபானு, 45. இவருக்கு, சேலம் தனியார் மருத்துவமனையில், டயாலிசிஸ் செய்வதற்காக கெங்கவல்லியில் இருந்து, ஆத்துார் புதுப்பேட்டை வழியாக, ஆம்னி வேனில் சேலம் நோக்கி சென்றார். நேற்று காலை, 8:30 மணியளவில் புதுப்பேட்டை தனியார் பள்ளி எதிரே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, புளிய மரத்தின் மீது, ஆம்னி வேன் மோதியது. இந்த விபத்தில், ஷகிராபானு காருக்குள் சிக்கி உயிரிழந்தார்.
அவரது உடலை தீயணைப்பு நிலைய வீரர்கள், ஆத்துார் டவுன் போலீசார் வெளியே மீட்டனர். கார் ஓட்டி வந்த கணவர் நசீர், படுகாயங்களுடன் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.