/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம் சேலத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம்
சேலத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம்
சேலத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம்
சேலத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம்
ADDED : ஜூன் 10, 2025 01:07 AM
சேலம், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., அருள், நேற்று மாநகராட்சி மைய அலுவலகம் வந்தார். சிறிது நேரத்தில், அலுவலக வாயில் முன் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தில், 10 கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்தேன். அதில் ஒரு கோரிக்கை, பெருமாள் மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைக்க வேண்டும் என்பது. அதற்காக திட்டமிடப்பட்ட போது, அங்கு ஒரு வி.ஐ.பி.,யின் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்பதற்காக, கிரிவலப்பாதைக்கு சம்பந்தமே இல்லாமல், மேச்சேரியான் வட்டம் அருகில், 94 லட்சம் ரூபாய் செலவில் சாலை போட்டதாக கணக்கு காண்பித்துள்ளனர். பணி முடிக்கப்பட்ட திட்டங்களில், கிரிவலப்பாதை என குறிப்பிட்டுள்ளனர்.
ஏ.டி.சி., நகர் பாலத்தில், சிறிது மழை வந்தாலே இடுப்பளவு தண்ணீர் வரும். சட்டசபையில் பேசி மேம்பாலம் வாங்கி வந்தேன். மாநகராட்சியில் டெண்டர் விட்டனர். அதில் நான் குறுக்கீடே செய்யவில்லை. ஆனால், அந்த இடத்தில் மேம்பாலம் அமைத்தால், ஏ.டி.சி., நகர் அனெக்ஸ் என்ற பகுதியில், உள்ள 40 வீடுகளுக்கு வழியில்லாமல் போகும். இதுகுறித்து மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் செல்வவிநாயகத்திடம் பேசினேன். அவர் 'உங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. போனை வையுங்கள்' என்கிறார். பல திட்டங்களுக்கு, எம்.எல்.ஏ., நிதியில் ஒதுக்கினால், அதை தடுத்து நிறுத்துகின்றனர். எனக்கு சம்பளமாக, ரூ.1.04 லட்சம் கொடுக்கின்றனர். ஆனால், எந்த பணியும் செய்ய விடுவதில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டி பெருக்கும் வேலை இருந்தால் கொடுங்கள்; அதையாவது செய்கிறேன் என வந்துள்ளேன். இவ்வாறு கூறினார்.
மாநகராட்சி செயற்பொறியாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சமாதானமாகி எம்.எல்.ஏ., அருள் கிளம்பி சென்றார்.