வாரச்சந்தை ஏலம் 7ம் முறை ஒத்திவைப்பு
வாரச்சந்தை ஏலம் 7ம் முறை ஒத்திவைப்பு
வாரச்சந்தை ஏலம் 7ம் முறை ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 27, 2025 01:46 AM
தாரமங்கலம், தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை ஏலம், ஏற்கனவே, 6 முறை ஒத்திவைக்கப்பட்டு, 7ம் முறை, நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் காஞ்சனா தலைமை வகித்தார். அதில் வைப்பு தொகை செலுத்திய, 3 பேர் பங்கேற்றனர்.
ஏலத்தொகை, 20.30 லட்சம் ரூபாய் என, நகராட்சி நிர்ணயித்து ஏலத்தை தொடங்கியது. ஏலதாரர்கள், 14 லட்சம் ரூபாய் வரை மட்டும் கேட்டதால், அதிகாரிகள் ஏலத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.