Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலாவை 2026ல் செயல்படுத்துவோம்; அமைச்சர் வேலு

பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலாவை 2026ல் செயல்படுத்துவோம்; அமைச்சர் வேலு

பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலாவை 2026ல் செயல்படுத்துவோம்; அமைச்சர் வேலு

பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலாவை 2026ல் செயல்படுத்துவோம்; அமைச்சர் வேலு

ADDED : மே 27, 2025 02:01 AM


Google News
சேலம், சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட, தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட செயலர்கள் முறையே, அமைச்சர் ராஜேந்திரன், சிவலிங்கம், செல்வ கணபதி எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட உறுப்பினருமான வேலு பேசியதாவது:

வரும், 2026 தேர்தலிலும் தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும்.

இதற்காக கட்சி தலைமை, தேர்தல் பணிக்காக மட்டும் என்னை சேலம் மாவட்டத்துக்கு நியமித்துள்ளது. தனக்கு சீட் கிடைக்காவிட்டால், தி.மு.க., வெற்றி பெறாது என நினைப்பவர் தான் கட்சியின் புற்றுநோய். அத்தகைய நோய், கோஷ்டிபூசலை கட்சியினர் அறவே அகற்றவேண்டும். எதிர்க்கட்சி தலைவரின் மாவட்டம் இது என்பதை மறந்து விடக்கூடாது. அதனால் மற்ற மாவட்டங்களை காட்டிலும், இங்குள்ள தி.மு.க.,வினர் திறம்பட களப்பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள, 3,283 பாக முகவர்கள் நினைத்தால் வெற்றி இலக்கை அடைந்து விடலாம். பாக முகவர்கள் இளைஞர்களாக இருந்தால் சிறப்பாக செயல்பட முடியும். சரிவர செயல்படாத முகவர்களை ஒருவாரத்தில் மாற்றி, அதன் பட்டியலை அந்தந்த மாவட்ட செயலர்களிடம் நிர்வாகிகள் வழங்கி விடலாம். பென்னாகரம்-2009 இடைத்தேர்தல் பார்முலாவை அப்படியே சேலம் தொகுதிகளில் செயல்படுத்துவோம். தேர்தல் யுக்தியை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இதில் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us