ADDED : பிப் 11, 2024 12:43 AM
மேட்டூர்:டெல்டா பகுதி விவசாயிகள், சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3ம் தேதி முதல், 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், 5,600 கன அடியாக இருந்தது.
நேற்று காலை, அணை நீர்மட்டம், 66.52 அடி, நீர் இருப்பு, 29.78 டி.எம்.சி.,யாக காணப்பட்டது. வினாடிக்கு, 4,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மாலை, சாகுபடிக்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்கு மட்டும், 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.