காப்பியடிக்க அனுமதி மறுப்பு: ஆசிரியர் மீது பட்டாசு வீச்சு
காப்பியடிக்க அனுமதி மறுப்பு: ஆசிரியர் மீது பட்டாசு வீச்சு
காப்பியடிக்க அனுமதி மறுப்பு: ஆசிரியர் மீது பட்டாசு வீச்சு
ADDED : மார் 27, 2025 06:43 AM

திருவனந்தபுரம் : கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், ஆசிரியரின் கார் மீது பட்டாசுகளை வீசினர்.
கேரளாவில் தற்போது பிளஸ் 2 அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. மலப்புறம் மாவட்டம் திரூரங்காடி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நேற்று மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர்.
அப்போது சில மாணவர்கள் காப்பியடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர், அதற்கு அனுமதிக்கவில்லை. காப்பி அடிக்க முடியாத மாணவர்கள், தேர்வு முடிந்த பின், அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.
அந்த ஆசிரியர் தன் காரில் பள்ளியிலிருந்து புறப்பட்டார். அப்போது அந்த மாணவர்கள் அவரது கார் மீது சரமாரியாக பட்டாசுகளை பற்ற வைத்து வீசினர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்தன. எனினும் ஆசிரியருக்கு காயம் ஏற்படவில்லை. போலீசார், மாணவர்களில் சிலரை பிடித்து விசாரிக்கின்றனர்.